அரிதாரம் ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. தாமரையில் ‘வழுக்கை முகம்’ என்கிற சிறுகதையோடு அவர் படைப்புலகத்திற்குள் கால் வைத்தார். 19 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எழுதியவரின் அனுபவங்களை, தாக்கங்களை, பிரதிபலிப்புகளை, எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. இந்தியாவின் தற்போதைய நிலையை அரிதாரம் என்கிற கதை சுட்டிக்காட்டுகிறது. தில்லியிலிருந்து சென்னை வரை பயணப்படும்போது ஏற்பட்ட அனுபவங்களை ‘மாயைகள்’ என்கிற கதை விவரிக்கிறது. பூடகமான கதைகளும், பரிசோதனை முயற்சிகளும் இத்தொகுப்பில் உண்டு. ‘அழுக்கு’ என்பது இத்தொகுப்பு பற்றி தாமரையில் விமர்சனம் எழுதிய பொன்னீலன் அவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்றதற்காக வருந்தாத துரோணரை வருத்தப்பட வைக்கும் ‘தலை மாணாக்கன்’ என்கிற கதையும் இதில் உண்டு. வாசித்து முடிக்கும்போது பலவித மனித மனங்களைப் படித்த உணர்வு அவசியம் ஏற்படும்.
பதிப்பாளர்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை 600098.
தொலைபேசி: 044-26251968/26258410
முதல் பதிப்பு: ஜூன் 2005
8-ஆவது பதிப்பு: ஜனவரி 2016
9-ஆவது பதிப்பு: அக்டோபர் 2019