‘வாய்க்கால் மீன்கள்’ நூலிற்கான தமிழக அரசின் 1995-ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதைத் தொகுப்பு விருது
கொடி நாள் வசூலிற்கான விருது
‘ஆத்தங்கரை ஓரம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது
சிறு சேமிப்பு வசூலிற்கான சிறந்த ஆட்சியர் விருது
சிறந்த கட்டுரைகளின் தொகுப்பிற்காக பாரத ஸ்டேட் வங்கியின் விருது (ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் மற்றும் ஏழாம் அறிவு ஆகிய நூல்கள் )
அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் திருக்குறள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது
வாஷிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையும் முதல் பரிசைப் பெற்றது
‘பத்தாயிரம் மைல் பயணம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நூலுக்கான விருது
இவர் எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்திற்கு தினத்தந்தி நாளிதழ் இரண்டு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய ‘2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்’ என்ற இலக்கியப் பரிசை அளித்து சிறப்பித்தது. இந்த விருது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கைகளால் வழங்கப்பட்டது.
இலக்கியச் சிந்தனை அமைப்பு இவர் எழுதிய ‘மூளைக்குள் சுற்றுலா என்னும் நூலை 2018-ஆம் ஆண்டிற்கான இரண்டு சிறந்த நூல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியது.