தனிநபர் பங்களிப்பு


தனிநபர் பங்களிப்பு
  • இவர் தென்னாற்காடு மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருக்கையில் தற்போதைய விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முதலியார்குப்பம் என்ற கிராமத்தைத் தத்தெடுத்திருந்தார். சுனாமியால் இந்தக் கிராமம் பாதிக்கப்பட்டபோது மைசூர் சிட்டிசன்ஸ் ஃபோரம் என்ற அமைப்பின் உதவியுடன் கிராமத்தையே சீரமைத்தார். ஃபோரம் 4.5 கோடி ரூபாய் செலவில் அனைவருக்கும் வீடு கட்டித் தந்தது. சுனாமியின் பாதிப்பிற்குப் பிறகு பெரிய வீடுகள் மீனவர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டது தமிழ்நாட்டிலேயே இந்தக் கிராமத்திற்குத்தான். இவரது முயற்சியால்தான். இதனால் பெருமகிழ்ச்சியடைந்த மீனவர்கள் அந்த கிராமத்திற்கு ‘இறையன்பு குடியிருப்பு’ என்றே பெயர் சூட்டிவிட்டார்கள்.

  • இரண்டாயிரத்துக்கும் மேலான கூட்டங்களில் பங்குகொண்டு மாணவர்களுக்கு அவர்களின் சமூகக் கடமைகளை உணர்த்தியுள்ளார்.

  • தினத்தந்தி, தினமலர், தினமணி, த ஹிந்து ஆகிய பத்திரிக்கைகள் ஏற்பாடு செய்த ஊக்கமளிப்புக் கூட்டங்களில் பேசி மாணவர்களுக்கு மாபெரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

  • இவரது எழுச்சியூட்டும் பேச்சுக்களின் மூலம் மாணவர்களைச் செதுக்கும் திட்டம் ஒன்றை குமுதம் வார இதழ் 20 கல்லூரிகளில் நிகழ்த்தியது.

  • குடிமைப் பணிகளுக்கு எவ்வாறு தயார் செய்வது என்று இவர் எழுதிய புத்தகம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்தது. 1995-க்குப் பிற்பாடு போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோருக்கு இப்புத்தகம் உதவியாக இருந்திருக்கிறது.

  • குடிமைப் பணிகளில் வெற்றி பெற்ற நூற்றுக்கும் மேலானவர்கள் இவரிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற்றவர்கள்.

  • பொதிகைத் தொலைக்காட்சியில் `கல்லூரிக் காலங்கள்’ என்ற தலைப்பில் ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய 500 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ளோர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் கண்டு களித்தனர்.

  • இவர் நிறைய புத்தகங்களை பள்ளிகளுக்கும், கிராமப்புர நூலகங்களுக்கும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

  • இவர் இதுவரை 164 பத்தகங்களை பல்வேறு பிரிவுகளில் எழுதியுள்ளார்.

  • ஐம்பதுக்கும் மேலானவர்கள் இவரின் புத்தகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

  • பல்வேறு பிரச்சினைகளுடன் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

  • அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் நடத்தையை சீர்திருத்திக்கொள்ளவும், மது போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகியிருப்பதற்கும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

  • இவர் தனது புத்தகங்களின் மூலம் கிடைக்கும் உரிமை ஊதியத்தை நிலவொளிப் பள்ளிகளுக்கும், அடயாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் கொடுத்துள்ளார். அதேபோல், முதலியார்குப்பத்தில் சுனாமி புனரமைப்பிற்கு மைசூரிலுள்ளவர்கள் உதவியதற்குக் கைமாறாக அங்கு வெள்ளம் வந்தபோது தனது சேமிப்பிலிருந்து நிதியுதவியும் செய்துள்ளார்.

  • தினத்தந்தி நாளிதழ் வழங்கிய 2017-ஆம் ஆண்டின் இலக்கிய விருதுக்கான இரண்டு லட்சம் ரூபாயை (வரி நீங்கலாக) மைலாப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதியில் நீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவுவதற்காக நன்கொடையாக அளித்துள்ளார்.